உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் செப்.,5ல் கும்பாபிஷேகம்

சூரம்பட்டிவலசு சுயம்பு மாரியம்மன் கோவிலில் செப்.,5ல் கும்பாபிஷேகம்

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, சுயம்பு மாரியம்மன் கோவிலில், செப்.,5ல் கும்பாபிஷேக விழா நடக்கிறது. இதை முன்னிட்டு செப்.,1ல் காவிரி ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வருதல்; அன்றிரவு கிராம சாந்தி பூஜை நடக்கிறது.

செப்.,2ல் அதிகாலை, 5:00 மணிக்கு கணபதியாகம், கோ பூஜை, நவகோள் வழிபாடு; செப்.,3ல் முதல்கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு; செப்.,4ல் இரண்டாம் கால யாக பூஜை, மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது. செப்.,5ல் காலை, 7:30 மணிக்கு நான்காம் கால யாக பூஜை, 9:00 மணிக்கு யாக சாலையில் இருந்து கலசங்கள் புறப்பாடு நடக்கிறது. இதை தொடர்ந்து, 9:30 மணிக்கு, கோவிலின் கோபுர கலசத்துக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !