உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் 2 ஆண்டுக்கு பின் அன்னதானம்

ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில் 2 ஆண்டுக்கு பின் அன்னதானம்

ஈரோடு: பெரியமாரியம்மன் கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், அன்னதான திட்டம் துவங்கப்பட்டது.

தமிழக முழுவதும், கோவில்களில் அன்னதான திட்டத்தை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ., தொடங்கி வைத்தார். இதன்படி, ஈரோடு, பெரியமாரியம்மன் கோவிலில் திட்டம் தொடங்கப் பட்டது. இரண்டு ஆண்டுக்கு முன், கோவிலில் மராமத்து பணி நடந்தது. இதனால் சின்னமாரியம் மன் கோவிலுக்கு, அன்னதான திட்டம் மாற்றப்பட்டது. கடந்த ஆண்டு மராமத்து பணி நிறை வடைந்தது. ஆனால், இடப்பற்றாக்குறையால் திட்டம் இடம் மாற்றப்படவில்லை. இந்நிலையில் உபயதாரர் ஒருவர், பெரியமாரியம்மன் கோவிலுக்கு, அன்னதானக்கூடம் கட்டித் தந்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன் திறக்கப்பட்டு, பெரியமாரியம்மன் கோவிலில் மீண்டும், அன்னதானத் திட்டம் செயல்பட தொடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !