உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி 700 ஆண்டுகள் பழமையான இரு பைரவர் சிலைகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி 700 ஆண்டுகள் பழமையான இரு பைரவர் சிலைகள் கண்டெடுப்பு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, 700 ஆண்டுகள் பழமையான இரு பைரவர் சிலை கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், காவேரிப்பட்டணம் அடுத்த கீழ்பையூர் கிராமத்தில், வரலாற்று ஆய்வுக்குழுத் தலைவர் நாராயணன் தலைமை யில் ஆய்வு மேற்கொண்டனர். இதில், 700 ஆண்டுகள் பழமையான இரு பைரவர் சிலைகளை கண்டெடுத்தனர்.

இது குறித்து, அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில், கீழ்பையூர் மிகச்சிறப்பு வாய்ந்த ஊராக இருந்துள்ளது.

ஊரின் நடுவில், சிவன் கோவில் இருந்ததற்கான அடையாளம் உள்ளது. மணிகுண்டு என்பவரின் தோட்டத்தில், இரு பைரவர் சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

பைரவர் என்பது சிவனடியின் அகோர வடிவம். சுடர்முடி என்று சொல்லக்கூடிய முடியானது, மேல்நோக்கி தீச்சுடல் செல்வது போல் இருவருக்கும் காட்டப்பட்டுள்ளது.

கோரப்பல்லும், கண்களும் உக்கிர நிலையில் இருக்கிறது. உடுக்கை, பிச்சைப்பாத்திரம், பாசக் கயிறு, சூலம், வாகனமாக நாய் காட்டப்பட்டுள்ளது. பைரவர் நிர்வாண நிலையில், நாகத்தை இரண்டு பக்கங்களிலும் கொண்டுள்ளார். இவர் நாக பைரவர் என, அழைக்கப்படுகிறார். இவை, 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிற்கால சோழர் அல்லது வைசாளர் கால சிவன் கோவிலை சேர்ந்த சிற்பங்களாகும். இவ்வாறு அவர் கூறினார். வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன், ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன், பேராசிரியை வாசுகி விஜயகுமார் ஆகியோர் உடனி ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !