உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரியில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

தர்மபுரியில் கும்பாபிஷேகத்தையொட்டி பெண்கள் முளைப்பாரி ஊர்வலம்

தர்மபுரி: இலக்கியம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத நித்யகல்யாண வெங்கடேச பெருமாள் மற்றும் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று 30ல், திரளான பெண்கள் முளைப்பாரி ஊர்வலம் சென்றனர். நேற்று 30ல் காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை, கணபதிஹோமம், சுதர்சனஹோமம், கோமாதா பூஜை, கங்கணம் கட்டு தல் மற்றும் தீபாராதனை நடந்தது. 11:00 மணிக்கு இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் இருந்து, சுவாமி ஊர்வலம் மற்றும் பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குடம், முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு வாஸ்து பூஜை, ஹோமம், முதல்கால யாக பூஜை நடந்தது. இன்று 31ல், காலை, 9:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை நடக்கிறது. நாளை (செப்., 1ல்)காலை, 5:00 மணிக்கு, மூன்றாம்கால யாக பூஜை, பூர்ணாஹூதி நடக்கிறது. 8:00 மணிக்கு கோபுர கலசத் துக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது.

தொடர்ந்து, மூலவர், உற்சவர் மஹா சம்ப்ரோஷணம், மஹா தீபாராதனை நடக்கவுள்ளது. மாலை, 6:00 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு, சீர் வரிசை அழைத்தல், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !