திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமாவாசை பூஜை
ADDED :2566 days ago
சாணார்பட்டி : சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமா வாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.சுவாமிக்கு பால், பன்னீர், பழம், புஷ்பம், இளநீர், மஞ்சள் நீர், தேன், விபூதி, தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடந்தது.
தொடர்ந்து ராஜா அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. அருகிலுள்ள காமாட்சி மவுன குருசாமி மடத்தில் அன்னதானம் நடந்தது. சுற்றுப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.