உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னையில் 3,000 மேல் விநாயகர் சிலைகள் சேகரிப்பு

சென்னையில் 3,000 மேல் விநாயகர் சிலைகள் சேகரிப்பு

சென்னை:கடந்த, 25 ஆண்டுகளாக, 3,000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளை,  சென்னை, ’ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்’ முரளி, சேகரித்திருக்கிறார்.

பிரபல இனிப்பகமான, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்,  முரளி. இவரின் அலுவலகம், சென்னை, தி.நகரில் உள்ளது. இங்கு, 25  ஆண்டுகளாக, முரளி சேகரித்த, 3,000 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள்  உள்ளன.அலுவலகத்தில், இரு அறைகள் முழு வதும், விநாயகர் சிலைகளே  நிறைந்துள்ளன.

ஆனால், ஒன்றைப் போல மற்றொன்று இல்லை.யோகாசனம் செய்வது, கிரிக்கெட் விளை யாடுவது, ஸ்கூட்டரில், தன் எலியாருடன் விரையும் விநாயகர் என, பல விதங்களில் சிலை கள், நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.

இது குறித்து, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி கூறியதாவது:எந்த ஊருக்கு சென்றாலும், அங்குள்ள விநாயகர் சிலை ஒன்றை வாங்கி வந்து விடுவேன்.

இப்போது, இணைய வசதி இருப்பதால், எங்கெல்லாம், வித்தியாசமான விநாயகர் சிலை இருக் கிறதோ... அதை, தேடி பிடித்து வாங்கி விடுகிறேன்.மேலும், நண்பர்கள் பரிசளிப்பது என, தற்போது என்னிடம், 3,000க்கும் மேற்பட்ட, விநாயகர் சிலைகள் சேர்ந்துவிட்டன. இது எனக்கு, ஆனந்தத்தை தரும் விஷயம்.ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனத்தில், விநாயகர் சதுர்த்தி பலகாரத்துடன், விநாயகர் சிலை ஒன்றை வழங்க உள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !