உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி! வீதிக்கு வீதி பெருக்கெடுத்த உற்சாகம்

திருப்பூரில் களை கட்டிய விநாயகர் சதுர்த்தி! வீதிக்கு வீதி பெருக்கெடுத்த உற்சாகம்

திருப்பூர்: திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி உள்ளிட்ட, இந்து அமைப்பினர் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அன்னதானம்,  விளையாட்டு போட்டிகள் என கோலாகலமாக கொண்டாடினர்.விநாயகர் சதுர்த்தி  விழா நேற்று 2ம் தேதி கொண்டாடப்பட்டது. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ, 4 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இரண்டு அடி முதல், 11 அடி வரை சிலை செய்யப்பட்டிருந்தது.அதிகாலை,  கணபதி ஹோம த்துடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு  நடந்தது. அன்னதானம், கோலப் போட்டி, சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு,  நடனப் போட்டி என உற்சாகத்துடன் கொண்டாடினர்.இந்து முன்னணி மாநில  தலைவர் காடேஸ்வரா சுப்ர மணியம் கோட்டை மாரியம்மன் கோவிலில்  வழிபாட்டை முடித்து விட்டு, புது பஸ் ஸ்டாண்டில் நடந்த அன்ன தானம்  நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூர்  மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வாகன தணிக்கை,  தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில்,  ஆயுதப்படை, ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

விசர்ஜன ஊர்வலம்வரும் 4ம் தேதி அனுமன் சேனா, சிவசேனா, இந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிசத், தமிழ் மாநில சிவசேனா, இந்து முன்னணி, இந்து முன்னேற்ற கழகம் ஆகியோ ரின் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.

5ம் தேதி இந்து முன்னணியும் மற்றும் 6ம் தேதி பாரத் சேனா சார்பில்  நடக்கிறது.சாமளாபுரம் குளத்தில், மூன்று இடங்களில், விநாயகர் சிலைகளை  கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் நகரில் பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ள விநாயகர்  சிலைகள், வழிபாட்டுக்கு பிறகு, தண்ணீரில் கரைக்கப்படும். பி.ஏ.பி., வாய்க்காலில்  தண்ணீர் வராத காரணத்தால், இந்தாண்டும் சாமளாபுரம் குளத்தில் சிலையை  கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, சோமனுார் செல்லும் வாகனங்கள், குளக்கரையில் இடதுபுறம் திரும்பி  செல்ல, ரோடு சீரமைக்கப்படுகிறது. குளக்கரை ரோடு பழுதாகியுள்ளதால், மண்  கொட்டி சமன் செய்யப்பட்டுள்ளது. குளம் நிறைந்து, உபரிநீர் செங்குளத்துக்கு  சென்று கொண்டிருக்கும் நிலையில், கரையில் இருந்தே சிலைகளை கரைக்க  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி, குளத்துக்குள் யாரும் நுழைய முடியாதபடி,  மரக்குச்சிகளால் தடுப்பு அடைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான சிலைகளை  கரைக்க வேண்டியிருப்பதால், மூன்று இடங்களில் சிலை கரைக்க ஏற்பாடு  செய்துள்ளனர்.

வாகனங்களில் வருவோர், சிலைகளை கரைத்துவிட்டு, அப்படியே சென்று,  அய்யன்கோவில் ரோடு வழியாக வெளியே, போக்குவரத்து மாற்றம்  செய்யப்பட்டுள்ளது.நேற்று 2ம் தேதி முதல், சிலை கரைப்பு பணி துவங்கியுள்ளதால், மங்கலம் போலீசார், குளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிக அளவு சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ள, இந்து முன்னணியினர், வரும், 5ம் தேதி, விசர்ஜன ஊர்வலம் நடத்தி, சிலைகளை சாமளாபுரத்தில் கரைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !