உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியநாயக்கன்பாளையம் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

பெரியநாயக்கன்பாளையம் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது

பெரியநாயக்கன்பாளையம்:  துடியலுார், கவுண்டம்பாளையம், சின்னதடாகம்  வட்டாரங் களில், நேற்று 2ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப் பட்டது.நரசிம்மநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சித்தி விநாயகர் கோவிலில், அதிகாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நரசிம்மநாயக்கன்பாளையம் பாலாஜி நகர் செல்வ விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன.துடியலுார் அருகே என்.ஜி.ஜி.ஓ., காலனியில், இந்து முன்னணி சார்பில்,  25 ம் ஆண்டு விநா யகர் சதுர்த்தி விழாவில், தாரை, தப்பட்டை முழங்க  ஊர்வலமும் முடிவில் அன்னதானம் நடந்தது. துடியலுார் பஸ் ஸ்டாண்டில்  பா.ஜ., மற்றும் இந்து முன்னணி இணைந்து, ஆறாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி  விழாவை கொண்டாடியது. மதியம் அன்னதானம் நடந்தது.இதில் பா.ஜ., மாநில  பொது செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் கவுன்சிலர் வத்சலா ஆகியோர்  பங்கேற்றனர்.வடமதுரை விருந்தீஸ்வரர் கோவில் அருகே இந்து முன்னணி  சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. சிறப்பு பூஜைகளும், மாலை விநாயகர்  திருவீதி உலாவும் நடந்தன. இன்று 3ம் தேதி ஸ்ரீஸ்ரீ ஆனந்தம் திருமண மண்டபத்தில், 108  திருவிளக்கு பூஜை நடக்கிறது.மேட்டுப்பாளையம் ரோடு, வடமதுரையில்  விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு  இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !