யார் இந்த ‛’அநீஸ்’
ADDED :2259 days ago
’வி’ என்றால் ’மேலான’ என்றும், ’வெற்றி’ என்றும் பொருள் உண்டு. ’நாயகர்’ என்றால் ’தலைவர்’. விநாயகர் என்பதற்கு மேலான தலைவர் என்பது பொருள். சிவனும், பார்வதியும் கூட முதல் தெய்வமான இவரை வழிபட்ட பிறகே, கடமைகளைச் செய்ய அனுமதியுண்டு. இதில் வயது வித்தியாசமோ, உறவோ முக்கியம் அல்ல. வழிபாட்டுக்கு ஒழுங்குமுறை வேண்டும் என்பதற்காக விநாயகர் வழிபாடு முதல் வழிபாடு ஆக்கப்பட்டது. இதனால் விநாயகர் அர்ச்சனையில், ஓம் ’அநீஸ்வராய நமஹ’ என்றொரு நாமம் உண்டு. ’அநீஸ்’ என்பதற்கு ’நிகர் இல்லாதவர்’ என்பது பொருள். இவருக்கு மேலான ஒருவர் இல்லை என்பதால், ’அநீஸ்வரன்’ என பெயர் பெற்றார். குழந்தைகளுக்கு ’அனீஷ்’ என பெயர் சூட்டுவர்.