உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கீழடி அகழாய்வில் நட்சத்திர வடிவ அணிகலன்

கீழடி அகழாய்வில் நட்சத்திர வடிவ அணிகலன்

திருப்புவனம்: கீழடியில் நடந்து வரும் 5ம் கட்ட அகழாய்வில் குழந்தைகள் விளையாடும் பொம்மை அச்சு, நட்சத்திர வடிவ அணிகலன் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.5ம் கட்ட அகழாய்வில் அழகிய செங்கல் கட்டுமானங்கள், பெண்கள் அணியும் அணிகலன்கள், குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மைகள்  உள்ளிட்டவை கிடைத்து வருகின்றன. நட்சத்திர வடிவ கழுத்து பதக்கம் கண்டறியப்பட்டுள்ளது. நடுவில் சிறிய  துளையுடன் காணப்படும் இந்த வகை அணிகலன்கள் ஆண்கள் அணிவதாக  இருக்க கூடும் என கருதப்படுகிறது.அதுபோல குழந்தைகள் விளையாடும் ஆண், பெண் பொம்மை அச்சுகள், மருந்து  கிண்ணமும் கிடைத்துள்ளது. முருகேசன், நீதியம்மாள் நிலங்களில் கிடைத்து வரும் பொருட்கள் அனைத்தும் 2  ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கு வாழ்ந்தவர்கள் செல்வச்செழிப்பு  மிக்கவர்களாக இருந்திருக்க கூடும் என கருதப்படுகிறது.  சுடுமண்ணால் ஆன அணிகலன்கள், சின்னஞ்சிறிய பானைகள், அச்சுகள் இவற்றை  உறுதிப்படுத்துவாக தெரிகிறது. தற்போது கிடைத்துள்ள நட்சத்திர அச்சுகள் இரண்டும் ஒரே அளவாக உள்ளதால்  கணவன், மனைவி இருவரும் அணிந்திருக்க வாய்ப்புண்டு. இதுவரை அகழாய்வில் கிடைத்த பொருட்களை ஆய்விற்கு அனுப்பும் போதுதான்  அதனு டைய பயன்பாடு குறித்த உறுதியான தகவல் கிடைக்கும் என தொல்லியல்  ஆய்வாளர்கள் தெரிவித்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !