உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகல கொண்டாட்டம்

தேனி: தேனி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி சதுர்த்தி விழா கோலாகலமாக  கொண்டாடப் பட்டது. அனைத்து விநாயகர் கோயில்களிலும் சிறப்பு அபிேஷகம்  நடந்தது. சதுர்த்தி விழா விற்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட 650 சிலைகள் உள்ள  இடங்களில் பூஜைகள் நடந்தன.* தேனி பெத்தாட்சி விநாயகர், சோமாஸ் கந்தர் கோயில், கன்னிமூல கணபதி, மூலவர் கணபதிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மஹா கணபதி ஹோமம் நடந்தது.பின், ’சடோஜம்’ பூஜை என்ற 16 வகையான அரிசிமாவு, மஞசள்பொடி, பால், தயிர்,  இளநீர், சந்தனம், தேன், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களில் அலங்கார  அபிஷேகங்கள் நடந்தன. பின், மூலவர் கணபதிக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்  நடந்தது. என்.ஆர்.டி., நகர் கணேச கந்த பெருமாள் கோயில் விநாயகருக்கு சிறப்பு  அலங்கார ஆரா தனைகள் நடந்தது. பங்களாமேடு மீனாட்சி சுந்தரேஸ்வரர்  கோயிலில் ஸ்ரீவலம்புரி விநாய கருக்கு கவசம் அணிவிக்கப்பட்டு அலங்கார  அபிஷேகங்கள் நடந்தது. பெரியகுளம் ரோடு வேல்முருகன் கோயிலில்  விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னஞ்சி கிருஷ்ணா நகரில் விநாயகர்  கோயிலில் சதுர்த்தி விழா நடந்தது.பெத்தாட்சி விநாயகர் கோயில் எதிரில் இந்து முன்னணி சார்பில், 14 அடி உயர வீர விநாயகர் நிறுவப்பட்டு, நேற்று 2ம் தேதி திருக்கண் திறந்து சிறப்பு யாகம், பூஜை, ஆராதனை நடந்தது. பொறியாளர் செண்பகராஜன் தலைமை வகித்தார். மாவட்டப் பொதுச் செயலளர் முருகன், மாவட்டச் செயலாளர் உமையராஜன், நகரத் தலைவர் கார்த்திக், பா.ஜ., இளைஞரணி மாவட்டச் செயலாளர் விஜயகுமார், நகரத் தலைவர் ரவி, நகர பொதுச் செயலாளர் முத்து மணி, இளைஞரணி மாவட்ட பொதுச் செயலாளர் தேவக்குமார், நகர இளைஞரணி பொதுச் செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.* இந்து எழுச்சி முன்னணி: சார்பில் ஸ்ரீயோக விநாயகர் 12 அடியில் நிறுவப்பட்டு, நேற்று 2ல், காலை பூஜைகள் நடந்தன. நிறுவனர் பொன்ரவி தலைமை வகித்தார். நகரத் தலைவர் வெங்கலப்பாண்டி, நகரப் பொதுச் செயலாளர் செல்லப்பாண்டி, பொறுளாளர் ராஜேஷ், செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் இலங்கை யோகேஸ்வரன் எம்.பி., இந்து எழுச்சி பேரவை மாநில நிர்வாகி சந்தோஷ்குமாரின் சொற்பொழிவு நடந்தது.* கே.ஆர்.ஆர்., நகர் விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, சிறப்பு  அபிஷேக ஆராதனைகள் நடந்தது. விழாவை யொட்டி பேச்சு, நடனம் உள்ளிட்ட  கலை நிகழ்ச்சிகளும், விளையாட்டு போட்டிகளும், பாட்டு கச்சேரி உள்ளிட்டவை  நடந்தது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, போடியில் விநாயகர் கோயில்களில்  சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது.போடி புதுார் சங்கர  விநாயகர் கோயிலில் விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள்  நடந்தது. கவுரவத்தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் தலைமை வகித்தார்.  சுவாமி அலங்காரத்தினை அர்ச்சகர் பரமசிவம் செய்திருந்தார். குலாலர்பாளையம்  விநாயகர் கோயில், போடி அணைப்பிள்ளையார் கோயில், சந்தை பேட்டை  விநாயகர் கோயில், அக்ரஹார விநாயகர், அமராவதிநகர் விநாயகர் கோயில்,  போடி மெயின் ரோட்டில் இந்து முன்னனி சார்பில் வைக்கப்பட்டிருந்த  விநாயகருக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாரதனைகள் நடந்தது. விநாயகருக்கு  பொங்கல் வைத்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டன. * ஆண்டிபட்டி விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்து முன்னணி சார்பில் ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் நகரில் 51 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடந்தது.  இந்து முன்னணி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வம் தலைமையில்  ஆண்டிபட்டி எம்.ஜி.ஆர். சிலை அருகே விநாயகர் சிலைக்கு கண் திறப்பு நிகழ்ச்சி  நடந்தது. தொடர்ந்து யாகசாலை பூஜைகளுடன் பொங்கலிட்டு, விநாயகருக்கு  அவல், பொரி, சுண்டல் படைக் கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதம்  வழங்கப்பட்டது. விழாவில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு மொக்கராஜ்,  மகளிர் அணி சுந்தரி, மகராசி, நிர்வாகிகள் கண்ணன், முருகேசன், கருப்பையா  உள்பட பலர் கலந்து கொண்டனர். சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன் பட்டி உட்பட அனைத்து ஊர்களிலும் விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் செய்து வழிபட்டனர்.  சில்வார்பட்டியில் மெயின் ரோடு, பெருமாள்கோயில் வீதி, மேலத்தெரு,  வடக்குத்தெரு, ஆசாரிபட்டறை தெரு, கிழக்குத் தெரு புதுத்தெரு வழியாக  விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பக்தர்கள் வீடுகளின்  முன்பாக நின்று விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். சிலை வைகை  அணையில் கரைக்கப்பட்டது. பா.ஜ. சில்வார்பட்டி ஊராட்சி தலை வர் முருகன்,  முருகேசன், வீரையா, ஆறுமுகம், முத்து ஆகியோர் ஏற்பாடுகளை  செய்தி ருந்தனர்.* பெரியகுளம்: பெரியகுளத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் 58 சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று 2ம் தேதி மாலை ஆஞ்சநேயர் கோயில் முன்பு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை, வர்த்தக பிரமுகர் ஓ.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் உமையராஜன், மாவட்ட பொது செயலாளர் முருகன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் ராஜபாண்டியன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கோபிகண்ணன் பங்கேற்றனர். ஊர்வலம் வடகரை, தென்கரை முக்கிய வீதி வழியாக பெரிய குளம் பாலசுப்பிரமணியர் கோயில் வராகநதியில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !