உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

மதுரையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்

மதுரை: மதுரை மேலமாசிவீதி - வடக்குமாசிவீதி நேரு ஆலால சுந்தர விநாயகர்,  ரயில்வே காலனி செல்வ விநாயகர் உட்பட நகரில் உள்ள விநாயகர் கோயில்களில் சிறப்பு பூஜை, அபிஷேகம் நடந்தது.திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில்  எழுந்தருளியுள்ள மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில், உற்ஸவர் விநாயகர் மற்றும் கிராமத்தினர் சார்பில் வழங்கப்பட்ட களிமண் பிள்ளையார்  சிலை வைக்கப்பட்டு பூஜை நடந்தது.கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை  படைக்கப் பட்டு தீபாராதனை நடந்தது. திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் ஆக., 29 முதல் நடந்த லட்சார்ச்சனை,  யாகசாலை பூஜை நேற்று 2ம் தேதி பூர்த்தி செய்யப்பட்டு, மூலவர், உற்ஸ வருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது.மகா கணபதி ஹோமத்தை தொடர்ந்து மாலையில் மூஷிகவாகனத்தில் சுவாமி  வீதி உலா நடந்தது. பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம்,  சிறப்பு பூஜைகள் முடிந்து மாலையில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு சிறப்புஅபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் மருதுபாண்டியர் தெரு ஆனந்த விநாயகர் கோயிலில் ராஜ  அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார்.மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு  அபிஷேகம், பூஜை முடிந்து பிரசாதம் வழங்கப்பட்டது. அலங்காநல்லுார் அழகர்கோவில் சோலைமலை முருகன் கோயிலில் வித்தக  விநாயகருக்கு சிறப்பு  அபிஷேகம் நடந்தது.கொழுக்கட்டை, சுண்டல் படையலுடன் தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள்  மலர் மாலைகளை காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர். வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி மற்றும் ஆதிவேல்  சன்னதியிலும் விசேஷ பூஜை நடந்தது. உற்ஸவர் வித்தக விநாயகர் சஷ்டி  மண்டபத்தில் எழுந்தருளி கோயில் பிரகாரத்தைசுற்றிவந்து இருப்பிடம் சேர்ந்தார்.சோழவந்தான் பசும்பொன்நகர் வரசித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை  நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பூஜாரி சேகர் செய்திருந்தார். வாடிப்பட்டி விநாயகர் பக்தர் பேரவை பொறுப்பாளர் குருசாமி தலைமையில்  சிங்கம், மான் வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.இன்ஸ்பெக்டர் குமார் துவக்கி வைத்தார். இதில் எஸ்.ஐ., சவுந்திரபாண்டி,  போலீசார்சுந்தர், வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போடிநாயக்கன்பட்டி செல்வவிநாயகர் கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்  நடந்தது.சுவாமிக்கு சிறப்பு அர்ச்சனை ஆராதனை நடந்தது. ஏற்பாடுகளை விழா  கமிட்டியினர் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.பேரையூர்: மத்தகரை சிவசக்தி வலம்புரி விநாயகர் கோயிலில் அபிேஷகம்,  தீபாராதனை நடந்தது. அன்னதானம் வழங்கப் பட்டது. ஏற்பாடுகளை விழா  குழுவினர் செய்தனர்.பேரையூர் பிள்ளையார்பட்டி பாதயாத்திரை குழு சார்பாக 22ம் ஆண்டு சதுர்த்தி  ஊர்வலம் நடந்தது. 6 அடி உயரமுள்ள காரியமணி கணபதிமற்றும் சமயபுரம் மாரியம்மன் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து மொட்டமலை சரவண பொய்கையில் கரைக்கப்பட்டது. ஏற்பாடு களை பாதயாத்திரை குழு நிர்வாகிகள் செய்திருந்தனர்.* உசிலம்பட்டி: இத்தாலுகாவில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உசிலம்பட்டி நகர், தாலுகா, எழுமலை, செக்கானுாரணி, வாலாந்துார், விக்கிரமங்கலம், உத்தப்ப நாயக்கனுார், எம். கல்லுப்பட்டி, டி.ராமநாதபுரம் பகுதிகளில்123 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.* எழுமலையில் இன்று (செப்.,3) இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு  எழுமலை கண்மாயில் கரைக்கின்றனர். உசிலம்பட்டி பகுதி விநாயகர் சிலைகளை  நாளை அணைப்பட்டி, வைகை அணை பகுதியில் கரைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !