பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த் தியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சக்தி விநாயகர் கோவி லில், விநாயகர் சதுர்த்தியையொட்டி, காலை, 5:30 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, புண்யாகவாசனம், கணபதி ஹோமம், திரவியாகுதி மற்றும் அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து, சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தது.பொள்ளாச்சி கடைவீதி பால கணேசர் கோவிலில், மோகன கணபதி ஹோமம் நடந்தது. அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடை பெற்றன. தங்க கவச அலங்காரத்தில் விநாயகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொள்ளாச்சி ஜூபிலி கிணறு வீதி, ஆதிசக்தி விநாயகர் கோவிலில், இளைஞர் இயக்கம் சார்பில் சதுர்த்தி விழா நடந்தது. கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜைகள், அன்னதானம் நடந்தது. மாலையில், திருவீதி உலா நடந்தது.பொள்ளாச்சி பனிக்கம்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் எட்டாம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவில், கணபதி ேஹாமம், அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், அன்னதானமும் நடந்தது.
மாலையில், சந்தன காப்பு அலங்காரத்தில் விநாயகப்பெருமான்அருள்பாலித்தார்.பொள்ளாச்சி ஆர்.கே., நகர் ஆனந்த விநாயகர் கோவிலில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சேத்துமடை காளியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் எடுத்து வந்த தீர்த்தத்தில், அபிஷேகம், அலங்கார பூஜை நடந்தது.
பொள்ளாச்சியில் பொதுமக்கள், இந்து அமைப்புகள் சார்பில், 344 இடங்களில் விநாயகர் சிலை கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. ஐந்து அடி முதல், 15 அடி உயர சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
* வால்பாறையில் இந்துமுன்னணி சார்பில், நகரம் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள கோவில்களில் விநாயகர் சதுர்த்தி தினமான நேற்று 2ம் தேதி, 93 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.சுப்ரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை கணபதி ஹோமமும், சிறப்பு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
* கிணத்துக்கடவு கோட்டை வலம்புரி விநாயகர் கோவிலில், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், திருநீறு போன்றவைகளால் அபிஷேக வழிபாடு நடந்தது.
அதன்பின், வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு, தீபராதணை காண்பிக்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியிலுள்ள விநாயகர் கோவில்களில், அபிஷேக, அலங்கார வழிபாடு நடந்தது. இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில், 50 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
* ஆனைமலை சுற்றுப்பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப் பட்டது.
இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், 210 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது.ஆனைமலை நெல்லுக்குத்திப்பாறை பகுதியில், விவேகானந்தர் நற்பணி மன்றம் சார்பில், விநாயகர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. சிறுவர் களுக்கு ’மியூசிக்கல் சேர், சுலோ சைக்கிள், லெமன் ஸ்பூன்’ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப் பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
ஆனைமலை அடுத்த டாப்சிலிப், கோழிகமுத்தி யானைகள் முகாமிலுள்ள விநாயகர் கோவி லில், வனச்சரக அலுவலர் நவீன்குமார் தலைமையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப் பட்டது. முகாமில் இருந்த, வளர்ப்பு யானைகளை கொண்டு, விநாயகருக்கு மலர் துாவி வழிபாடு நடந்தது. இதேபோன்று, வரகளியாறு முகாமில், யானைகளுக்கு பொங்கல் வைத்து சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
நெகமம் இந்து முன்னணி சார்பில், தலைவாசல் செல்வகணபதி கோவிலில், நான்காம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி பிரதிஷ்டை மற்றும் விசர்ஜன பெருவிழா நேற்று 2ம் தேதி துவங்கியது.காலை, 10:00 மணிக்கு மகாஅபிஷேகம், கலச அபிஷேகம் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில், தேரில் திருவீதி உலா வந்து அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில், சிறப்பு பஜனையும்அன்னதானமும் நடந்தது.