உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / போத்தனுாரில் 234 சிலைகள் பிரதிஷ்டை

போத்தனுாரில் 234 சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியையொட்டி போத்தனுார், மதுக்கரை, செட்டிபாளையம்  சுற்றுப்பகுதிகளில், இந்து அமைப்புகள் மற்றும் மக்கள் சார்பில், 234 விநாயகர்  சிலைகள் பிரதிஷ்டை செய்யப் பட்டன.

போத்தனுார், குனியமுத்துார், மதுக்கரை, செட்டிபாளையம், க.க.சாவடி போலீஸ் எல்லை களுக்கு உட்பட்டபகுதிகளில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, அனுமன் சேனா, இந்து மக்கள் கட்சி தமிழகம், வி.எச்.பி., - ஏ.பி.வி.பி., தமிழக வி.எச்.பி., உள்ளிட்ட இந்து அமைப்புகள் மற்றும் மக்கள் சார்பில், 234 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.இப்பகுதிகளிலுள்ள விநாயகர் கோவில்களில், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் திரளாக வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !