உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லை டவுன் உச்சினி மகாகாளி மாரியம்மன் கோயிலில் நாளை கொடை!

நெல்லை டவுன் உச்சினி மகாகாளி மாரியம்மன் கோயிலில் நாளை கொடை!

திருநெல்வேலி : நெல்லை டவுன் உச்சினிமாகாளி அம்மன், மாரிஅம்மன் கோயில் 70வது கொடை விழா நாளை (3ம் தேதி) நடக்கிறது. கொடை விழாவை முன்னிட்டு இன்று (2ம் தேதி) காலையில் கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், லெட்சுமி பூஜை, விநாயகருக்கு 108 சங்காபிஷேகம், கும்பாபிஷேகம், சிறப்பு பூஜை, இரவு 7 மணிக்கு மாக்காப்பு, காப்பு கட்டுதல், குடி அழைப்பு, தீபாராதனை, வில்லிசை நடக்கிறது. 3ம் தேதியான நாளை காலை 6 மணிக்கு தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், பால்குடம் புறப்படுதல், 108 சங்காபிஷேகம், திரவிய பூஜை, கும்பாபிஷேகம், நேர்த்திகடன் செலுத்துதல், மதிய கொடை, தாமிரபரணி நதியில் இருந்து கிரக குடம் கோயில் வந்து சேருதல், அக்னி சட்டி, காளிவேஷம் மேளதாளங்களுடன் வலம் வருதல், இரவு அக்னி சட்டி ஏந்திவருதல், அம்பாளுக்கு அன்னம் படைத்தல், தீபாராதனை நடக்கிறது. 4ம் தேதி பொதுமக்களுக்கு அன்னம் வழங்குதல், இரவு 7 மணிக்கு அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதியுலா, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக் கமிட்டியார், இளைஞர் அணியினர் மற்றும் பொதுமக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !