ரவணசமுத்திரத்தில் ராமநவமி விழா துவக்கம்!
ADDED :4906 days ago
ஆழ்வார்குறிச்சி : ரவணசமுத்திரம் ராம பஜனை மடத்தில் ராமநவமி உற்சவம் 10 நாட்கள் நடக்கிறது. ரவணசமுத்திரத்தில் ராம பஜனை மடத்தில் 68ம் ஆண்டு ராமநவமி விழா கோலாகலமாக துவங்கியது. ராம ஜனன நாளன்று சிறப்பு பூஜைகளுடன் விழா துவங்கியது. பணிநிறைவு ஆசிரியர் சீதாராமன் உபன்யாசம் செய்தார். 10 நாட்களும் தினமும் காலையில் கணேச அய்யர், பாலசுப்பிரமணியன் மற்றும் குழுவினர் உஞ்சவிருத்தியும், ஆர்.வி.எஸ். நலக்கமிட்டி நீலகண்டன் உபநிச பாராயணமும், தினமும் இரவு கே.கே.வெங்கட்ராமன் சகஸ்ரநாம அர்ச்சனையும் நடத்துகின்றனர். வரும் 8ம் தேதி ஆர்.எஸ்.கிருஷ்ணன் தலைமையில் அகண்ட நாம ஜெபமும், 9ம் தேதி மேலகரம் கோபாலகிருஷ்ணசாமி பஜனை சபாவினர் சீதா கல்யாண வைபவத்தையும், ஆஞ்சநேயர் உற்சவத்தையும் நடத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர்கள் செய்து வருகின்றனர்.