உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவில் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு!

எல்லையம்மன் கோவில் அறநிலையத்துறையிடம் ஒப்படைப்பு!

பவானி: பவானி காமராஜ் நகர் பகுதியில் சக்திவிநாயகர் மற்றும் எல்லையம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் நேற்று முறைப்படி, அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பவானி சக்திவிநாயகர், எல்லையம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. சிறிய அளவில் இருந்த இக்கோவிலை, விரிவாக்கம் செய்ய பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர் சார்பில், ஐந்தரை சென்ட் நிலம் வாங்கப்பட்டு, ராஜகோபுரத்துடன் திருப்பணிகள் நடந்தது. 2010 மே மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இக்கோவிலில் இருந்துதான் மாசி மகத்திருவிழாவின்போது, செல்லியாண்டியம்மனுக்கு, குதிரை, பூக்கூடையுடன் சக்தி அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், இக்கோவிலை, அறநிலையத்துறையினர் நிர்வகிக்க முடிவு செய்யப்பட்டது. இக்கோவிலுடன், 102 பொருட்களையும், பவானி செல்லியாண்டியம்மன் கோவிலின் செயல் அலுவலரான மருதாசலத்திடம் ஒப்படைத்தனர். திருப்பணிக்குழு சவுந்திரம், செல்வம், வெங்கடாசலம் உட்பட பலர் பங்கேற்றனர். செயல் அலுவலர் மருதாசலம், ""செல்லியாண்டியம்மன், மாரியம்மன் கோவில்களின் இணைக்கோவிலாகும். நேற்று முதல் இக்கோவில், அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கோவில் ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு பணிகள் நடக்கும். வழக்கம்போல, மூன்று கால பூஜைகள், வழிபாடுகள் நடக்கும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !