அழகைக் கண்டே சிரித்தேன்
ADDED :2227 days ago
ஒருமுறை, நபிகள் நாயகம் ஒரு தோழரின் முகத்தைப் பார்த்து சிரித்தார். அந்த தோழர் சிறிய தாடி வைத்திருந்தார். தன்னைப் பார்த்து நாயகம் கேலியாக சிரிக்கிறாரோ என அவர் நினைத்தார். உடனே எழுந்து போய், தாடியை எடுத்து விட்டு வந்தார். உடனே நாயகம் அவரைப் பார்க்க விரும்பாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். அந்த தோழர் பதைபதைப்புடன், “நீங்கள் கிண்டலாக சிரித்ததைப் பார்த்து தானே தாடியை எடுத்தேன்” என்றார். அதற்கு “உமது தாடியின் அழகைப் பார்த்தல்லவா சிரித்தேன்” என்றார். ஆண்களுக்கு தாடி அழகு என்கிறது இஸ்லாம்.