உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டுமன்னார்கோவில் விநாயகர் சிலை ஊர்வலம்

காட்டுமன்னார்கோவில் விநாயகர் சிலை ஊர்வலம்

காட்டுமன்னார்கோவில்: சிதம்பரம் அடுத்த குமராட்சியில், இஸ்லாமியர் ஒருவர்  விநாயகர் சிலை ஊர்வலத்தை துவக்கி வைத்தார். சிதம்பரம் அடுத்த  குமராட்சியில் உள்ள பொய்யுரையா பிள்ளையார் கோவிலில், 13ம் ஆண்டு  விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.

விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட பின், ஊர்வலம் துவங்கியது.பிள்ளையார் கோவி லில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலத்தை, இஸ்லாமியர் இமாம் அலி பச்சை கொடி அசைத்து துவக்கி வைத்தார். ராஜன் வாய்க்காலில் சிலை கரைக்கப்பட்டது.
வர்த்தக சங்க கவுரவ தலைவர் சக்கரவர்த்தி, தலைவர் தமிழ்வாணன், ஆசிரியர் வரதராஜன், கலியபெருமாள், ராமசந்திரன், கூட்டுறவு சங்க தலைவர் செல்வம், இயக்குனர் இளஞ்செழியன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !