உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவகோட்டையில் விநாயகர் சதுர்த்தி

தேவகோட்டையில் விநாயகர் சதுர்த்தி

தேவகோட்டை, தேவகோட்டை சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவிலில்  விநாயகர் சதுர்த் தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.இரவு உற்ஸவ  விநாயகர் சிறப்பு அலங்கார த்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு  அருள்பாலித்தார்.

கலங்காது கண்ட விநாயகர் கோவில் 24ந்தேதி கொடியேற்றத்துடன் சதுர்த்தி விழா துவங்கி யது. ஒன்பதாம் நாள் விநாயகர் திருத்தேர் உலா நடந்தது. நேற்று 2ம் தேதி விநாயகர் சிலம்பணி ஊருணியில் தீர்த்தவாரி செய்தார். தொடர்ந்து இரவு புஸ்ப பல்லக்கு வீதி உலா நடந்தது.தேவகோட்டை ஜெயங்கொண்ட விநாயகர் கோவிலில் அபிஷேகம் விசேஷ பூஜைகள் நடந்தன.  

நேற்று 2ம் தேதி காலை கணபதிஹோமம் நடத்தி சிறப்பு அபிஷேகம்,சிறப்பு  தீபாராதனை நடந்தது.ராம்நகர் பஸ் ஸ்டாப் செல்வவிநாயகர் கோவிலில் சிறப்பு  யாகம், சிறப்பு பூஜைகள் நடந்தன.கருதாவூரணி கிழக்கு கைலாசவிநாயகர்  கோவிலில் தினசரி சிறப்பு பூஜைகள் நடந்தன. தேவகோட்டை நகர சிவன்  கோவிலில் மரகத விநாயகர், விநாயகர் புரத்தில் உள்ள சக்தி விநாயகர்  கோவில், வீட்டு வசதிவாரிய குடியிருப்பில் உள்ள சுந்தர விநாயகர் கோவில்,  ஆட்டோ ஸ்டாண்டில் விநாயகர் கோவில் உட்பட அனைத்து கோயில்களிலும்  சிறப்பு பூஜை நடந்தது.

*சிவகங்கை கவுரி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. செப்.1 ம் தேதி மாலை 6:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர சிறப்பு பூஜை செய்யப்பட்டு 108 சங்காபிஷேகம்  நடந்தது. செப். 2ம் தேதி காலை 7:15 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜையும்,  காலை 10:00 மணிக்கு மஹா பூர்ணாகுதியும் நடந்தது.தொடர்ந்து சிறப்பு அபி ஷேக ஆராதனை செய்யப்பட்டு, தங்கக்கவச அலங்காரத்தில் சுவாமி  அருள்பாலித்தார். இரவு உற்சவர் திருவீதி உலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !