உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவதானப்பட்டி நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

தேவதானப்பட்டி நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்

தேவதானப்பட்டி:  சில்வார்பட்டி ஆணையூர் பங்காளிகள் பேச்சியாயி  வகையறாவிற்கு சொந்த மான நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்  விழாநடந்தது. முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி  ஹோமம், நவக்கிரக ஹோமம், சப்த கன்னி பூஜை, பூர்ணாகுதி திருமுறை  பாராயணம், தீப ஆராதனை செய்யப்பட்டது. இரண்டாம் நாளில் கோமாதா பூஜை,  நவசக்தி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா கும்பாபிஷேகம், தீப  ஆராதனை நடந்தது. ஈசானம் வீரமணி, ஈசானம் மாரிமுத்து ஆகியோர்  கும்பாபிஷேகத்தை நடத்தினர். ஏற்பாடுகளை வீரபிள்ளை, காமராஜ், கணேசன்,  வீரமணி, முத்துராமலிங்கம், நாகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். அன்னதானம்  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !