கோரிக்கை நிறைவேற...
ADDED :2230 days ago
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள மணவாளநல்லுாரில் உள்ள முருகன் ’கொளஞ்சியப்பர்’ என அழைக்கப்படுகிறார். உருவமாக இல்லாமல் சக்கரம் பொறிக்கப்பட்ட பீடமாக முருகன் இங்கு உள்ளார். பீடத்தின் அருகில் வேல் மட்டும் உள்ளது. பீடத்திற்கு சந்தனக் காப்பிட்டு பூஜை செய்கின்றனர். கோயில் அலுவலகத்தில் கிடைக்கும் ரசீதில் பக்தர்கள் தங்களின் கோரிக்கையை எழுதி அர்ச்சகரிடம் கொடுக்கின்றனர். இதற்கு ’பிராது கட்டுதல்’ என்று பெயர். கொளஞ்சியப்பரிடம் வைக்கும் நியாயமான கோரிக்கைகள் 48 நாட்களுக்குள் நிறைவேறும்.