கிருஷ்ணகிரி ஆதிசக்தி விநாயகர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, ஆதிசக்தி விநாயகர் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நேற்று 2ம் தேதி நடந்தது. கிருஷ்ணகிரி, புதுப்பேட்டை -சேலம் சாலையில் உள்ள, ஆதிசக்தி விநாயகர் கோவிலில், ஜீர்னோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த, 30 மாலை விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. 31 காலை கணபதி ஹோமம், மாலை, 5:30 மணிக்கு கும்ப அலங்கார பூஜைகள், முதற்கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று 2ம் தேதிகாலை, 6:00 மணிக்கு, நான்காம் கால பூஜைகள் நடந்தன.
காலை, 9:30 மணிக்கு, ஆதி சக்தி விநாயகர்கோவில் கோபுர கலசத்திற்கு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. 10:30 மணிக்கு, மூலஸ்தான கும்பாபிஷேகமும், தொடர்ந்து மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை ஆகியவை நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.