’குமாரபாளையத்தில் வரும் 7க்குள் விநாயகர் சிலையை காவிரியில் கரைக்க அறிவுரை
ADDED :2229 days ago
குமாரபாளையம்: ’குமாரபாளையத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை, வரும், 7க்குள் காவிரியில் கரைக்க வேண்டும்’ என, போலீசார் தெரிவித்துள்ளனர். குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன. ஒரு வாரத்துக்கு பின், அனைத்து சிலைகளையும் காவிரியில் கரைப்பது வழக்கம். ’இந்தாண்டு, வரும், 7 மாலை, 6:00 மணிக்குள் அனைத்து சிலைகளையும் கரைத்து விட வேண்டும்’ என, குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தேவி அறிவுறுத்தியுள்ளார். இது தவிர சேலம், சங்ககிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படும் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட இருப்பதால், அதற்கான பாதுகாப்பு பணிகளை போலீசார், தீயணைப்பு துறையினர் மேற்கொண்டுள்ளனர்.