உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமகிரிப்பேட்டையில், களிமண்ணால் விநாயகர் சிலை: இளைஞர்கள் அசத்தல்

நாமகிரிப்பேட்டையில், களிமண்ணால் விநாயகர் சிலை: இளைஞர்கள் அசத்தல்

ராசிபுரம்: நாமகிரிப்பேட்டையில், களிமண்ணால் விநாயகர் சிலையை,  இளைஞர்கள் உருவாக் கியுள்ளனர். நாமகிரிப்பேட்டை, தேவஸ்தானம் புதூர்,  சீராப்பள்ளி கிருஷ்ணாநகர், தண்ணீர் டேங்க், மேற்கு தெரு, கிழக்கு தெரு, வடக்கு  கும்பக் கொட்டாய், நடுவீதி, வேலவன் நகர், பட்டறை மேடு, கோபாலபுரம்  உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள்  வைக்கப்பட்டுள்ளன. பட்டறை மேட்டில், எட்டாவது ஆண்டாக முழுவதும்  களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இப்பகுதி  இளைஞர்களே, இதை உருவாக்கியுள்ளனர். களிமண்ணில் வேறு ஏதாவது மணல்,  செம்மண் கலந்தால் தான் சிலை செய்ய முடியும். இல்லையெனில், உருவம்  குழைந்துவிடும். ஆனால், இளைஞர்கள் களிமண்ணை மட்டுமே பயன்படுத்தி, ஏழடி  உயர சிலையை செய்துள்ளனர். வண்ண காகிதங்கள், துணியை கொண்டு  விநாயகரை அலங்கரித்துள்ளனர். அதேபோல், வேலவன் நகரில் புல்லட் விநாயகர்  சிலையை வைத்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !