உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

அருணேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா!

காரிமங்கலம்: காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று (ஏப்., 2) துவங்குகிறது. காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய்வாணை சமேத சிவசுப்பிரமணிய ஸ்வாமிக்கு ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. வழக்கம் போல் இந்த ஆண்டும் இன்று காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம், கொடியேற்றம் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு கொல்லுப்பட்டி ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலா நடக்கிறது. நாளை (ஏப்., 3) காலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமும், மதியம் 12 மணிக்கு வெள்ளையன் கொட்டாவூர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு ஸ்வாமி திருவீதி உலாவும், 4ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் ரமேஷ் குடும்பத்தின் சார்பில் ஸ்வாமி திருக்கல்யாண வைபவமும், திருவீதி உலாவும் நடக்கிறது. 5ம் தேதி பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜையும், 9 மணிக்கு மேல் ஸ்வாமி ரதம் ஏறும் நிகழ்ச்சியும், மதியம் 12 மணிக்கு தானப்ப கவுண்டர் மெட்ரிக் பள்ளி சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை எம்.எல்.ஏ., அன்பழகன், மல்லிகா துவக்கி வைக்கின்றனர். மாலை வாணவேடிக்கையும், தாரை தப்பட்டையுடன் தேரில் ஸ்வாமி திருவீதி உலாவும் நடக்கிறது. 6ம் தேதி காலை 9 மணிக்கு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், கொடியிறக்கமும், மதியம் 12 மணிக்கு முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணன் குடும்பத்தின் சர்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்ககும் நிகழ்ச்சியை தி.மு.க., நகர செயலாளர் சீனிவாசன் துவக்கி வைக்கிறார். விழா நாட்களில் நாள்தோறும் இரவு 8 மணிக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்குனி உத்தர திருவிழா குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர்கள் சீனிவாசன், செந்தில்குமார், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !