உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா

உடுமலை : உடுமலை மாரியம்மன் கோவிலில், நாளை கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உடுமலை மாரியம்மன் கோவிலில், தேர்த்திருவிழா கடந்த மாதம் 27ம் தேதி நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் முன்னிலையில், தேர்த்திருவிழா நிகழ்ச்சிகள் வாசிக்கப்பட்டு, தண்டோரா மூலம் நோன்பு சாட்டப்பட்டது. மூலவர் மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, நாளை (3ம் தேதி) செவ்வாய்கிழமை இரவு 8.00 மணிக்கு கம்பம் போடுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, பக்தர்கள் கம்பத்திற்கு மஞ்சள் நீர் விட்டு வழிபடும் நிகழ்ச்சி நடைபெறும். வரும் 5ம் தேதி இரவு 12.00 மணிக்கு கிராம சாந்தியும், வாஸ்து சாந்தியும்; 6ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கொடியேற்றமும், பகல் 2.00 மணிக்கு பூவோடு ஆரம்பம், சுவாமி திருவீதி உலா துவக்க நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. வரும் 10ம் தேதி இரவு 10.00 மணிக்கு பூவோடு நிறைவும்; 11ம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு மாவிளக்கு பூஜையும், மாலை 3.00 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகிறது. தொடர்ந்து 12ம் தேதி காலை 6.45 மணிக்கு அம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 4.15 மணிக்கு தேரோட்டம் நிகழ்ச்சியும்; 13ம் தேதி இரவு 8.00 மணிக்கு பரிவேட்டை மறறும் இரவு 10.00 மணிக்கு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஏப்., 14ம் தேதி காலை 7.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு, காலை 8.15 மணிக்கு கொடியிறக்கமும், காலை 11.00 மணிக்கு மகாபிஷேகமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !