உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ஆவணி மூல பிட்டுத்திருவிழா

திருப்பூர் ஈஸ்வரன் கோவிலில் ஆவணி மூல பிட்டுத்திருவிழா

திருப்பூர்:திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆவணி மூல நட்சத்திர  பிட்டுத் திருவிழா, வரும், 7 ம் தேதி நடக்கிறது.

சிவபெருமான் பிட்டுக்கு மண் சுமந்த ஐதீகத்தை நினைவுகூறும் வகையில்,  ஆண்டுதோறும் ஆவணி மாத மூல நட்சத்திர நாளன்று, பிட்டுத்திரு விழா  நடக்கும். அவ்வகையில், திருப்பூர் வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில், 67 ம்  ஆண்டு பிட்டுத்திருவிழா, 7ம் தேதி மாலை, 6:00 மணிக்கு  துவங்குகிறது.

விஸ்வேஸ்வர சுவாமி, விசாலாட்சி அம்மனுக்கு, அபிஷேக, ஆராதனையும், பிட்டுக்கு மண் சுமந்த படலக் காட்சியும் நடைபெறும். பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை நேரில் கண்டு, சிவபெருமானின் அருளுக்கு பாத்திரமாக  வேண்டுமென, பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதேபோல், அவிநாசி வாணியர் சமூகத்தின் சார்பில், ஆவணி மூல பிட்டுத்திருவிழா, 7ம் தேதி மாலை நடக்கிறது. இதையொட்டி, அவிநாசிலிங் கேஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேக, வழிபாடு நடக்கிறது.தொடர்ந்து ரிஷப வாகனத்தில், அம்மையப்பர் சிறப்பு வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ரத வீதிகள் வழியாக உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !