திருப்பூர் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் விநாயகர்சிலை விசர்ஜனம்
திருப்பூர்:அனுமன் சேனா உள்ளிட்ட அமைப்புகள் சார்பில், விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் இன்று நடக்கிறது.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிசத் உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் ஏறத்தாழ, 4 ஆயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
மாநகரில் மட்டும், ஆயிரத்து, 100 சிலைகள் இருக்கும். அதில், இந்து முன்னணி, 1,008; அனு மன் சேனா, 3; சிவசேனா, 6; இந்து மக்கள் கட்சி, 16; விஷ்வ ஹிந்து பரிசத், 14; இந்து முன்னே ற்ற கழகம், 10 மற்றும் இந்து மக்கள் கட்சி, 6 உள்ளிட்டவை அடங்கும்திருப்பூர் மாநகரில், ஆறு இந்து அமைப்புகள் சார்பில், விசர்ஜன ஊர்வலம் பொதுக்கூட்டம் நடக்கிறது.
அதில், அனுமன் சேனா, சிவசேனா ஊர்வலம் புது பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து, யூனியன் மில் ரோட்டில் பொதுக்கூட்டம்; இந்து மக்கள் கட்சி கே.வி.ஆர்., நகரில் ஆரம்பித்து, யூனியன் மில் ரோட்டில் கூட்டம்; விஷ்வ ஹிந்து பரிசத், புது பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து ஆலாங்காட்டில் கூட்டம்; இந்து முன்னேற்ற கழகம் ஆலாங்காட்டில் கூட்டம் மற்றும் இந்து மக்கள் கட்சியினர் யூனியன் மில் ரோட்டில் கூட்டம் நடக்கிறது.இந்த ஊர்வலம், பொதுக் கூட்டம் என அனைத் தும், 2:00 மணி முதல், 6:00 மணிக்குள் நடக்க உள்ளது. ஏறத்தாழ, 80 சிலைகள் சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட உள்ளது.இன்று நடக்க உள்ள விசர்ஜன ஊர்வலம், பொதுக்கூட்டம் பாதுகாப்பு பணிக்கு, 150க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.