உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூரில் விசர்ஜன ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்!

திருப்பூரில் விசர்ஜன ஊர்வலம் போக்குவரத்து மாற்றம்!

திருப்பூர்:இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம்  நடக்கிறது. இதை யொட்டி, மாநகர போலீசார் நாளை 5ம் தேதி போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.

இது குறித்து, திருப்பூர் மாநகர போக்குவரத்து போலீசார் கூறியதாவது:வரும், 5ம்  தேதி (நாளை) விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தை முன்னிட்டு, நகரில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள்,  மாற்றுப்பாதையில் சென்று, ஒத்துழைப்பு தர வேண்டும்.ஊர்வலப்பாதை - 1திருப்பூர்  புதிய பஸ் ஸ்டாண்ட், கண்ணகி நகர், எம்.எஸ்., நகர், கொங்கு மெயின் ரோடு  எல்.ஆர்.ஜி., காம்பவுண்டு, லட்சுமி நகர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு, டவுன் ஹால்,  கிரிஸ்டல் சந்திப்பு வழியாக ஊர்வலம் ஆலாங்காட்டை சென்றடைகிறது.

இதனால், அனைத்து ரக சரக்கு வாகனங்களும் காலை, 9:00 முதல் இரவு, 10:00  மணி வரை திருப்பூர் மாநகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் ஊர்வலம், கோவை டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகில் புறப்பட்டு, புது  பஸ் ஸ்டா ண்ட் செல்லும் வரை, அவிநாசியில் இருந்து வரும் அனைத்து  வாகனங்களும் பூண்டியிலி ருந்து பூலுவபட்டி ரிங் ரோடு வழியாக திருப்பி  விடப்படுகிறது.

சிலைகள் புது பஸ் ஸ்டாண்டை அடைந்தவுடன், அவிநாசியில் இருந்து, புது பஸ்  ஸ்டாண்ட் வரும் அனைத்து வாகனங்களும் ஆர்.டி.ஓ., சந்திப்பு மற்றும் புஷ்பா  சந்திப்புகளில், பயணி களை இறக்கி, ஏற்றி செல்ல வேண்டும்.

கருமாநல்லுார் ரோட்டில் இருந்து புது பஸ் ஸ்டாண்ட் நோக்கி வரும் அனைத்து  வாகனங் களும் மதியம், 2:00 மணி முதல், பூலுவப்பட்டி ரிங் ரோடு வழியாக  பூண்டி, வாவிபாளையம் ரோட்டில் திருப்பி விடப்படுகிறது.

புதிய பஸ் ஸ்டாண்டில் சிலைகள் அனைத்தும் கூடிய பின், இலகு ரக  வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள் போயம்பாளையம் பிரிவு,  பிச்சம்பாளையம் புதுார், காட்டன் மில் வழியாக திருப்பி விடப்படும்.

சிலைகள் மில்லர் பஸ் ஸ்டாப்பை அடைந்தவுடன், பெருமாநல்லுார்  ரோட்டிலிருந்து, புஷ்பா நோக்கி வரும் அனைத்து வாகனங்களும், 60 அடி ரோடு  கே.வி.பி., சந்திப்பிலிருந்து, ஆர்.டி.ஓ., சந்திப்பு வழியாக செல்லும்.

மில்லரில் இருந்து புஷ்பா சந்திப்பு நோக்கி செல்லும் போது, அவிநாசி ரோட்டில்  இருந்து வரும் வாகனங்களும், கீரணி சந்திப்பிலிருந்து தற்காலிக  ஒருவழிப்பாதையில், புஷ்பா சந்திப்பிலிருந்து காலேஜ் ரோடு வழியாக திருப்பி  விடப்படும்.

டவுன்ஹால் வந்தவுடன், மாநகராட்சி அலுவலக சந்திப்பு முதல் தாடிக்கார முக்கு  நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும் எம்.ஜி.ஆர்., சிலை நோக்கி திருப்பி  விடப்படும்.

பார்க் ரோடு வழியாக டவுன்ஹால் செல்லும் வாகனங்கள் எம்.ஜி.ஆர்., சிலை  சந்திப்பு முதல் குமரன் ரோடு வழியாக, தற்காலிக ஒரு வழி பாதையில் திருப்பி  விடப்படும்.

மங்கலம் ரோட்டிலிருந்து தாடிக்கார முக்கு வழியாக டவுன்ஹால் நோக்கி வரும்  வாகனங் களை, ஏ.பி.டி., ரோடு வழியாக திருப்பி விடப்படும்.ஊர்வலப்பாதை -  2வெள்ளியங்காடு ஆர்ச், புதுார் பிரிவு சந்திப்பு, கரட்டாங்காடு, பெரிச்சிபாளையம்,  வெள்ளியங்காடு நால் ரோடு சந்திப்பு, முத்தையன் கோவில், காட்டு வலவு  சந்திப்பு, பல்லடம் ரோடு மேம்பாலம், மாநகராட்சி சந்திப்பு, தாடிக்காரன் முக்கு,  ஆலாங்காடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !