உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

காணிப்பாக்கம் விநாயகர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம்

நகரி:சித்துார் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில் உள்ள வரசித்தி சுயம்பு  விநாயகர் கோவி லில், ஆண்டு பிரம்மோற்சவம், நேற்றுமுன்தினம் (செப்., 1ல்)  கொடியேற்றத்துடன் துவங் கியது.

பிரம்மோற்சவ விழா, இம்மாதம், 22ம் தேதி வரை, 21 நாட்கள் தொடர்ந்து  நடைபெறுகிறது. அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்  மற்றும் பூஜைகளுக்கு பின், பக்தர்கள் முன்னிலையில் கொடியேற்றம் நிகழ்ச்சி  நடந்தது.நேற்றுமுன்தினம் (செப்., 1ல்), காலை முதல் இரவு, 10:00 மணி வரை, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து, மூலவரை தரிசித்தனர்.

இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்ச வாகன சேவையில், மாடவீதியில் வீதியுலா  வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பிரம்மோற்சவ விழாவில், 9ம் தேதி, ரத  உற்சவம், 10ம் தேதி திருக்கல்யாணம், 18ம் தேதி, கல்பவிருட்ச வாகன சேவை,  21ம் தேதி, புஷ்ப பல்லக்கு, 22ம் தேதி, தெப்ப உற்சவத்துடன் ஆண்டு விழா  நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !