ஊத்துக்கோட்டை துர்கைக்கு ராகு கால பூஜை
ADDED :2264 days ago
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வர சுவாமி கோவில் வளாகத்தில் உள்ளது, துர்க்கை சன்னதி. இக்கோவிலில், நேற்று 3ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு, அம்மனுக்கு ராகு கால பூஜை நடந்தது.பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மஹா தீபாராதனை நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக, எலுமிச்சை பழத்தில், பெண்கள் விளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.