விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் செப்.9ல் திருக்கல்யாணம்
ADDED :2264 days ago
விருதுநகர்: விருதுநகர் சொக்கநாதர் கோயில் பிரம்மோற்ஸவ விழா செப்.2ல் கொடியேற் றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, மண்டப படிகளில் வழிபாடு நடந்தன. நேற்று முன்தினம் (செப்., 1ல்) காலை 9 :00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செப். 9 ல் திருக்கல்யாணம்,முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப்.10 ல் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் பிராமண சமாஜம் மண்டகப்படி, இரண்டாம் நாள் கோட்டைப்பட்டி ராஜ கம்பள நாயக்கமார் மண்டகப்படியும் நடந்தது.
இதில் அலங்காரத்தில் அம்பாளுடன் சுவாமி காட்சி அளித்தார். ஏற்பாடுகளை நிர்வாக அறங் காவலர் ராம்தாஸ் மற்றும் பிரமோற்ஸவ அறக்கட்டளையினர் செய்கின்றனர்.