திருக்கோவிலூரில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் பகுதியில் வைக்கப் பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரகண்டநல்லூர் அல்லி தாமரை ஏரியில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருக்கோவிலூர், சந்தப்பேட்டை, என்.ஜி.ஜி.ஓ.,நகர், மணம்பூண்டி, தேவனூர், அரகண்டநல்லூர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஐந்து முனை ரோட்டில் இருந்து மதியம் 2:00 மணிக்கு விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகி ராமமூர்த்தி ஊர்வலத்தை துவக்கி வைத்தார். தொடர்ந்து கிழக்குவீதி, ஏரிக்கரை மூலை, மேலவீதி, ஹாஸ்பிடல் ரோடு, மணம்பதண்டி, தேவனூர், வழியாக ஊர்வலம் சென்றது. இதில் 27 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பங்கேற்றது.
மாலை 5:00 மணிக்கு அரகண்டநல்லூர் அல்லி தாமரை ஏரியில் ஊர்வலம் நிறைவடைந்தது. சிறப்பு பூஜைகளுக்கு பிறகு ஏரியில் சிலைகள் கரைக்கப்பட்டது. தாசில்தார் சிவசங்கரன் மற்றும் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில், இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் குணபாலன் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பா.ஜ., காமராஜ், என்.ஜி.ஜி.ஓ., நகர் பாலாஜி உள்ளிட்ட வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.