உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை பகுதியில் 515 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.
உளுந்தூர்பேட்டை உட்கோட்டத்தில் 515க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன. அதில் உளுந்தூர்பேட்டை பகுதியில் 89, எடைக்கல் பகுதியில் 26, எலவனாசூர்கோட்டை பகுதியில் 35, திருநாவலூர் பகுதியில் 120, திருவெண்ணைநல்லூர் பகுதியில் 245 என மொத்தம் 515 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு தீபாராதனை வழிபாடு நடந்தது. 3ம் நாளான மாலை விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டன. திருவெண்ணெய்நல்லூர் பகுதியில் இருந்து 50 கற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கடலூர் கடலில் விஜர்சனம் செய்ய கொண்டு செல்லப்பட்டன. உளுந்தூர்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள சிலைகள் ஊர்வலமாக செல்வதற்காக பேரூராட்சி அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டன. அங்கு மத்திய அரசு வழக்கறிஞர் இலகண்ணன் ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக நீர் நிலைகளில் விஜர்சனம் செய்யப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்றடைந்தது.