உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணி விழா துவக்கம்

சிதம்பரேஸ்வரர் கோயிலில் ஆவணி விழா துவக்கம்

ராஜபாளையம்: ராஜபாளையம் தெற்குவெங்காநல்லுார் சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேஸ்வரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஐந்து நாட்கள் நடக்கும் விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக காலை 9:30 மணி முதல்சிவகாமி அம்மனுக்கும் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தனர்.தொடர்ந்து கொடிமரத்திற்கு பால், சந்தனம், இளநீர்,விபூதி,பன்னீர் போன்ற 12 வகை பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றம் நடந்தது.ஏராளமானோர் பங்கேற்றனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !