உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் வறண்ட அனுமன் தீர்த்த குளம்

ராமேஸ்வரத்தில் வறண்ட அனுமன் தீர்த்த குளம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் அனுமன் தீர்த்த குளம் வறண்டுள்ளதால் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.

ராமாயண வரலாற்றில், சிவலிங்கம் எடுத்து வரச் சென்ற அனுமன் தாமதம் ஆனதும், ராமேஸ்வரம் கடற்கரை மணலில் சீதை சிவலிங்கம் வடிவமைத்து தரிசித்தனர். இதனால் சினம் கொண்ட அனுமன், தன் வாலில் சீதை உருவாக்கிய சிவலிங்கத்தை இழுத்த போது வால் அறுந்தது. இதன் பின் ராமர், சீதை அறிவுரை வழங்கியதும் கோபம் தணிந்த அனுமன், அங்குள்ள குளத்தில் புனிதநீராடினார். இதுவே அனுமான் தீர்த்த குளமாக மாறியது.இங்கு நீராடினால் உடல் ஆரோக்கியம், மனம் அமைதி பெறும் என்பது ஐதீகம். அதன்படி இங்கு ஏராளமான பக்தர்கள் நீராடி சென்ற நிலையில், தற்போது பருவ, கோடை மழை பெய்யாத நிலையில் குளம் வறண்டு புதர் மண்டியுள்ளது. இதனால் நீராட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !