உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரிய காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கரிய காளியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கருமத்தம்பட்டி:கரிச்சிபாளையம் கரிய காளியம்மன், கருப்பராய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

கருமத்தம்பட்டி அடுத்த கரிச்சிபாளையத்தில் உள்ள, ஸ்ரீ கரியகாளியம்மன், கருப்பராய சுவாமி கோவில், 500 ஆண்டுகள் பழமையானது. கொங்கு வேளாளர் ஓதாளகுல மரபினருக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், புதிதாக, கர்ப்பகிரஹம், கோபுரம், அர்த்த, மகா மண்டபங்கள் கட்டும் திருப்பணிகள் நடந்தன.பணிகள் முடிந்து, கும்பாபிஷேக விழா, கடந்த, 1 ம் தேதி காலை, 7:00 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்கியது. மறுநாள் மாலை விக்னேஸ்வர பூஜை, கும்பஸ்தாபனம், முதல் கால ஹோமம் நடந்தது. கடந்த, 3ம் தேதி இரண்டாம் கால ஹோமம், விமான கலசம் வைத்தல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தன.நேற்று காலை நான்காம் கால ஹோமம் முடிந்து, திருக்குடங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. காலை, 7:00 மணிக்கு, விநாயகர், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள், ஸ்ரீ கரிய காளியம்மன், கருப்பராய சுவாமி, கன்னிமாருக்கு கும்பாபிஷேகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !