மேல்மலையனூர் கோவிலில் உண்டியல் காணி்க்கை ரூ.46, 33, 787
ADDED :2561 days ago
அவலுார்பேட்டை:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் 46 லட்சத்து 33 ஆயிரத்து 787 ரூபாய் உண்டியல் பணம் வசூல் ஆனது.மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை முடிந்து நேற்று 4ம் தேதி உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் ராமு, ஜோதி முன்னிலையில் கோவில் வளாகத்தில் காணிக்கை எண்ணும் பணி நடந்தது.இதில், காணிக்கையாக 46 லட்சத்து 33 ஆயிரத்து 787 ரூபாயும், 210 கிராம் தங்கம், 910 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.