உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சித்தி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்

பரமக்குடி சித்தி விநாயகர்கோயில் கும்பாபிஷேகம்

பரமக்குடி:பரமக்குடி ஆயிர வைசிய சபையை சேர்ந்த சித்தி விநாயகர்கோயில் கும்பாபிஷே கம் நேற்று 4ம் தேதி நடந்தது.

இக்கோயிலின் கும்பாபிஷேக விழா செப்.,2 ல் கணபதி ஹோமத்துடன் துவங்கியது. செப்.,3 காலை 9:00 மணிக்கு வைகையாற்றில்இருந்து சிவாச்சாரியார்கள் புனிதநீர் எடுத்து வந்து யாகசாலையை அடைந்தனர்.நேற்று 4ம் தேதி காலை 9:00 மணிக்கு மகாபூர்ணா குதிக்கு பின்னர், காலை 10:00 க்கு மேல்புனித குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடா கியது. தொடர்ந்து முத்தாலம்மன்கோயில் குருக்கள் சிவக்குமார் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் சித்தி விநாயகருக்கு விஷேச அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பரமக்குடி ஆயிர வைசிய சபைத்தலைவர் பாலுச்சாமி, செய லாளர் ஜெகநாதன், பள்ளிச் செயலாளர் இளங்கோ,சபை பொருளாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உட்பட ஏராளமானபக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !