வானுார் அடுத்த கொடுவூரப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
வானுார்:வானுார் அடுத்த கொடுவூரில் கொன்றைவார்குழலி உடனுறை கொடுவூரப்பன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று 4ம் தேதி நடந்தது.
கடந்த 2ம் தேதி விநாயகர் வேள்வி நடந்தது. 3ம் தேதி காலை நவகோள்கள் வழிபாடும் மாலை கலச வேள்வியும், யாகசாலை பூஜையும் நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, பூர்ணாஹீதி, தீபாராதனை நடந்தது.காலை 9:00 மணிக்கு கடம் புறப்பாடகி 9:15 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. ஒரே நேரத்தில் கொடுவூரப்பன் கொன்றைவார்குழலி ராஜகோபுரம், விநாயகர், முருகன், நவக்கிரகங்கள் கோவில்களின் கும்பாபிஷேகம் நடந்தது.மயிலம் பொம்மபுரம் ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், திருக்கழுக்குன்றம் தாமோதரன் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். சத்தியவேல் முருகனார் தலைமையிலான அந்தனர் குழுவினர் தமிழ் முறைப்படி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.