உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாயல்குடி வேளாங்கண்ணி மாதா சர்ச்சில் கொடியிறக்கம்

சாயல்குடி வேளாங்கண்ணி மாதா சர்ச்சில் கொடியிறக்கம்

சாயல்குடி:சாயல்குடியில் உள்ள வேளாங்கண்ணி மாதா சர்ச்சில் திருத்தல விழா  ஆக.,25 மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து 10 நாட்களும் சிறப்பு  திருப்பலி, ஜெபம், மன்றாட்டு,அசனவிருந்து உள்ளிட்டவைகள் நடந்தது.

கடந்த செப்.,2 (திங்கள்) இரவு 8:00 முதல் அதிகாலை 4:00 மணி வரைசாயல்குடி  நகர் பகுதிகள், வி.வி.ஆர்.,நகர் வரை அலங்கார அன்னையின் சொரூப தேர்பவனி  நடந்தது.நேற்று முன்தினம் (செப்., 3ல்) இரவில் பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ்தலைமையில் திருப்பலி, ஜெப உபதேசங்கள்வழங்கப்பட்டது.

நற்கருணை பவனியும், இன்னிசை பாட்டு கச்சேரியும் நடந்தது.நேற்று செப்.,2 பகல் 2:30 மணிக்கு வேளாங்கண்ணி மாதா சர்ச் முன்புறம்உள்ள கொடிமரத்தில பங்குத்தந்தை லியோ ரெக்ஸ் கொடிஇறக்கம் செய்தார்.மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அனைத்து சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர்.

மாதா சர்ச் தலைவர் அந்தோணி ராஜா,செயலாளர் பரலோகராஜ்,பொருளாளர் தொம்மை செபஸ்தியான்உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு இறைமக்கள், விழாக்குழுவினர்செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !