உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கமுதியில் கும்மி பாட்டுடன் விநாயகர் சிலை ஊர்வலம்

கமுதியில் கும்மி பாட்டுடன் விநாயகர் சிலை ஊர்வலம்

கமுதி:கமுதி சத்ரிய நாடார் உறவின்முறை பள்ளி நிர்வாக குழு சார்பில்  ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாடார் பஜார்  பகுதிகளில் வைக்கப்பட்டி ருந்த விநாயகர் சிலைகள் கரைக்கும் நிகழ்ச்சி  மாணவிகளின் நடனம், கும்மி பாட்டு நிகழ்ச்சிகளுடன் நடந்தது.

சத்ரிய நாடார் பள்ளி வளாகத்தில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி  நிர்வாகிகள் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து வந்து கமுதி செட்டி  ஊரணி கரையில் பொது மக்களின் பார்வைக்கு வைத்தனர்.

பின் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாணவிகளின் கும்மி  நடன நிகழ்ச்சிக்கு பின், சிலைகள் செட்டி ஊரணியில் கரைக்கப்பட்டன. இதே  போல் கமுதி அருகே அபிராமம் நவசக்தி விநாயகருக்கு 32 வகையான சிறப்பு  அபிஷேகங்கள், தீபாராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தது.

அபிராமம் நகர் முக்கிய வீதிகள், பஸ் ஸ்டாண்ட் வழியாக அலங்காரம் செய்யப்பட்டு, வெள்ளி தேரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு நவசக்தி விநாயகர் ஊர்வலம் நடந்தது.

வழி நெடுகிலும் பக்தர்கள் பூஜை பொருட்களுடன் அணி வகுத்து நின்று,  சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கபட்டது.  இதே போல் ராமசாமிபட்டியில் கிராம மக்கள் சார்பில் 6 அடி உயர விநாயகர்  சிலை கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பின்  கமுதி ரோட்டில் உள்ள ஊரணியில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !