மேட்டூரில் ஒரே நாளில் 1,500 சிலைகள் கரைப்பு
ADDED :2246 days ago
மேட்டூர்: மேட்டூர் காவிரியாற்றில், ஒரே நாளில், 1,500 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. சதுர்த்தி முடிந்து, மூன்றாம் நாளான நேற்று 4ம் தேதி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலிருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், விநாயகர் சிலைகளை, மேட்டூர் கொண்டு வந்தனர். காவிரியாற்றில், ஒவ்வொரு சிலைகளாக கரைக்க, போலீசார் அனுமதித்தனர்.
இதனால், காவிரி கரையோரம், சிலைகளை வரிசையாக வைத்து, பக்தர்கள் காத்திருந்து கரைத்தனர். பின், முனியப்பன் கோவில் அடிவாரமுள்ள காவிரியாற்றில், திரளானோர் நீராடினர். ஒரே நாளில், மேட்டூர் காவிரியாற்றில், 1,000, திப்பம்பட்டி, கூணான்டியூர் மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.