உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில், விநாயகர் சிலைகளை கரைத்த பக்தர்கள்

சேலத்தில், விநாயகர் சிலைகளை கரைத்த பக்தர்கள்

சேலம்: சேலத்தில், 1,000க்கும் மேற்பட்ட சிலைகளை, ஊர்வலமாக  எடுத்துச்சென்று, நீர்நிலை களில் கரைத்தனர்.

சேலம், அஸ்தம்பட்டி, வின்சென்ட் எல்லைப்பிடாரி அம்மன் கோவிலில், இந்து  முன்னணி சார்பில், விநாயகர் சிலை ஊர்வலத்தை, பா.ஜ., தேசிய செயலர் ராஜா,  சேலம் மாவட்ட தலை வர் கோபிநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.  சேலம் மண்டல, இந்து முன்னணி தலைவர் சந்தோஷ்குமார் தலைமையில்  புறப்பட்ட ஊர்வலத்தில், 47 வாகனங்களில், 220 சிலைகள், அஸ்தம்பட்டி,  சின்னதிருப்பதி, கன்னங்குறிச்சி வழியாக எடுத்துச்செல்லப்பட்டு, மூக்கனேரியில்  கரைக்கப்பட்டன. சேலம், குகை, காளியம்மன், மாரியம்மன் கோவிலின் அருகே,  இந்து ஆன்மிக பேரவை சார்பில் தொடங்கிய ஊர்வலத்தில், நான்கு  வாகனங்களில், 75 சிலைகள், முக்கிய வீதிகள் வழியாக எடுத்துச்செல்லப்பட்டு,  குமரகிரி ஏரியில் கரைக்கப் பட்டன. செவ்வாய்ப்பேட்டை, ’மராட்டா சில்வர்  வெல்பேர் அசோசியேஷன்’ சார்பில், விநாய கர் சிலை, வட இந்திய பாரம்பரிய  நடனத்துடன், ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, மேட்டூரில் கரைக்கப்பட்டது.

ஆத்தூரில்...: ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில், 134 விநாயகர் சிலைகளை  வைத்து, பக்தர்கள் வழிபட்டனர். ஆத்தூர் நகர், ஊரகம் பகுதிகளில், வீடு,  தெருக்களில், மக்கள், சிறு சிலைகள் வைத்து வழிபட்டனர். நேற்று 4ம் தேதி, துலுக்கனூர் ஒட்டம்பாறை குளத்தில், மினி சரக்கு வேன்கள் மூலம், 200க்கும் மேற்பட்ட சிலைகளை ஏற்றிவந்து கரைத்தனர்.

ஏற்காட்டில்...: ஏற்காடு சுற்றுவட்டாரத்தில் வைக்கப்பட்ட, 20 சிலைகளை, நேற்று 4ல்,  படகு இல்ல ஏரியில், மக்கள் கரைத்தனர். மாலையில், மழை பெய்ததால், சில  சிலைகளை, மக்கள் நனைந்தபடியே ஊர்வலமாக எடுத்துவந்து, கரைத்தனர்.

கல்வடங்கம், பூலாம்பட்டியில்...: விநாயகர் சதுர்த்தியையொட்டி, கடந்த, 2ல்,  இடைப்பாடி அருகே, கல்வடங்கம் காவிரியாற்றில், 3 அடி உயரத்துக்கு மேலான,  179 சிலைகள், பூலாம் பட்டியில், 143 சிலைகள் கரைக்கப்பட்டன. நேற்று  முன்தினம்  3ம் தேதி , கல்வடங்கத்தில், 221, பூலாம் பட்டியில், 154 சிலைகள்  கரைக்கப்பட்டன. நேற்று 3ம் தேதி , கல்வடங்கத்தில், 409, பூலாம்பட்டியில், 183 சிலைகள்  கரைக்கப்பட்டன. இதுதவிர, 3 அடிக்கு குறைவான அளவில், நேற்று மட்டும்,  500க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

கொடி அணிவகுப்பு: நாளை, ஆத்தூர் அருகே, தம்மம்பட்டியிலுள்ள, 43 சிலைகள்,  7ல், செந்தார ப்பட்டியில், ஆறு விநாயகர் சிலைகள் கரைப்பு ஊர்வலம் நடக்கிறது.  அதற்கு, தம்மம்பட்டி யில், கூடுதல் போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு  செய்யப்பட்டுள்ளது. அதை, மக்களுக்கு உணர்த்த, போலீஸ் கொடி அணி வகுப்பு,  நேற்று 4ம் தேதி  நடந்தது. அதில், சேலம் எஸ்.பி., தீபாகானி கேர் தலைமையில், 200க்கும்  மேற்பட்ட போலீசார் பங்கேற்றனர். தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில்  தொடங்கிய அணிவகுப்பு, கடைவீதி, துறையூர் சாலை வழியாக வந்து, பஸ்  ஸ்டாண்டில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !