செல்வி அம்மன் கோயில் முளைப்பாரி திருவிழா
முதுகுளத்துார்: முதுகுளத்துார் நகர் தேவர் உறவின் முறை சார்பில் செல்வி அம்மன் கோயில் பொங்கல் மற்றும் முளைப்பாரிதிருவிழா நடைபெற்றது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருந்து காப்புகட்டி விரதம் இருந்தனர்.தினமும் இரவு பெண்கள்,இளைஞர்கள் கும்மி அடித்தும், ஒயிலாட்டம் ஆடிவந்தனர். செப்.,3 காலை 9:00 மணிக்கு முளைப்பாரி திண்ணையில் இருந்து பொங்கல் பெட்டி துாக்கி ஊர்வலமாக வந்து செல்வி அம்மன் கோயிலில் பொங்கல் வைத்து பக்தர்கள் கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்பு மாலை 6:00மணிக்கு முளைப்பாரி துாக்கி ஊர்வலமாக வந்தனர். செப்.,4 காலை 10:00மணிக்கு முளைக்கொட்டு திண்ணையில் இருந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து காந்தி சிலை, பஸ்ஸ்டாண்ட், வழிவிடு முருகன் கோயில், அய்யனார் கோயில் வழியாக தெருவின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று ஊரணியில் கரைத்தனர். இரவு இளைஞர்கள் சார்பில்இன்னிசை கச்சேரி நடைபெற்றது.