சாணார்பட்டியில் விநாயகர் ஊர்வலம்
சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடந்தது.
வட்டாரத்தை சேர்ந்த பெத்தையகவுண்டன்பட்டி, பழநிமாநகர், ஜே.ஜே.,நகர், தோப்பூர், வீரசின்னம்பட்டி, கைலாசம்பட்டி, மேட்டுக்கடை, எமக்கலாபுரம், லட்சுமி நாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சாணார்ட்டி போலீஸ் ஸ்டேஷன் முன்பு எடுத்து வரப்பட்டது. அங்கு நடந்த கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார். கோவை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணன், ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் கார்த்திக் ஆகியோர் பேசினர். பஸ் ஸ்டாப் அருகில் இருந்து யூனியன் அலுவலகம், மேட்டுக்கடை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட விநாயகர் சிலைகள் மல்லாத்தான்பாறை குளத்தில் கரைக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு நிர்வாகி முத்தருள், ஒன்றிய பொதுச் செயலாளர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.