அனுமந்தராயர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்த, சிறுமுகை அருகே இடுகம்பாளையத்தில், அனுமந்தராய ஆஞ்சநேய சுவாமி கோவிலில் திருப்பணிகள் நடந்தன. கடந்த, 3ம் தேதி வாஸ்து சாந்தி, யாகசாலை ஹோம பூஜைகளுடன் மகா கும்பாபிஷேக விழா துவங்கியது.
கடந்த, 4ம் தேதி காலையில் திருப்பள்ளி எழுச்சியும், வேதபாராயணம் ஹோமம், சாற்றுமுறையும் நடந்தது. மாலையில் கோபுரத்தில் கலசம் அமைக்கப்பட்டது. நேற்று, (5ம் தேதி) காலை, யாக பூஜைகளுக்குப் பிறகு, தீர்த்தக்குடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்தனர். மேல்கோட்டை திருநாராயணபுரம், ராமானுஜர் சடகோப ஜீயர் தலைமையில், காரமடை அரங்கநாதர் கோவில் ஸ்தலத்தார் வேதவ்யாச சுதர்சன பட்டர் சுவாமிகள், கோபுரக்கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினார். இவ்விழாவில் எம்.பி., செல்வராஜ், எம்.எல்.ஏ.,க்கள் சின்னராஜ், ஆறுக்குட்டி, முன்னாள் அமைச்சர் வேலுசாமி, தமிழ் மாத முதல் வார சனிக்கிழமை வார வழிபாட்டுக்குழு தலைவர் ராஜ்குமார் உள்பட, பல முக்கிய பிரமுகர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.