ராமநாதபுரம் கோட்டை வாசல் விநாயகர் கும்பாபிஷேகம்
ராமநாதபுரம் :ராமநாதபுரம் அரண்மனை கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிஷே கம் செப்., 12 ல் நடக்கிறது.ராமநாதபுரம் அரண்மனைப்பகுதியில் கோட்டை வாசல் விநாயகர் கோயில் உள்ளது.சேதுபதி மன்னர் காலத்தில் கோட்டைக்குள் நுழையும் போது விநாயகரை வணங்கி தான் உள்ளே செல்வார்.
அரண்மனையில் உள்ள மன்னர் குடும்பத்தினர் மட்டுமல்லாதுஅனைவரும் கோட்டை வாசலில் அமைந்திருந்த விநாயகரை வணங்கி செல்வார்கள்.பிரபலமான கோட்டை வாசல் விநாயகர் கோயில் கும்பாபிேஷகம் 12 ஆண்டுகளுக்குபின் நடக்கவுள்ளது.
செப்., 10 ல் காலை 5:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜையுடன் துவங்குகிறது. மாலை 5:30 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல்கால யாக சாலை பூஜை, 108 திரவிய ஹோமத்துடன் நடக்கிறது.
செப்.,11 ல் காலை 9:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, பகல் 12:00 மணிக்கு யந்திர ஸ்தாபனம், பூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை, இரவுதிரவிய ஹோமம், வேத பாராயணத்துடன் நிறைவு பெறுகிறது.செப்., 12 ல் அதிகாலை 4:30 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை 7:45 மஹாபூர்ணாகுதி, தீபாராதனை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு கடம் புறப்பாடு, 8:15க்கு விமானகும்பாபிஷேகம், 8:25 க்கு மூலஸ்தான மஹா அபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாக செயலாளர் பழனிவேல் பாண்டியன், சரகபொறுப்பாளர் ராமு, மற்றும் திருப்பணிக்குழு, விழாக்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் செய்து வருகின்றனர்.