செஞ்சி தேவதானம்பேட்டையில் ஆன்மிக ஞான மையம் திறப்பு
செஞ்சி: தேவதானம்பேட்டையில் ஆன்மீக ஞான மையம் திறப்பு விழா நடந்தது.செஞ்சி தாலு கா தேவதானம்பேட்டையில் ஆன்மீக ஞானமையம் திறப்பு விழா நடந்தது. ஓய்வு பெற்ற பேரூராட்சி செயல் அலுவலர் நிறுவனர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
ஓய்வு பெற்ற சுகாதார அலுவலர் சாந்தா ஜெயராமன் தலைமை தாங்கினார். புதுச்சேரி எல்.ஐ.சி., விரிவாக்க அலுவலர் இறையவன் வரவேற்றார். காலை 10 மணிக்கு பழனி சற்குரு சுவாமிகள், சாக்கடை சித்தரின் சீடர் தஞ்சாவூர் சுவாமிகள் ஞானகொடியேற்றி, ஆன்மீக ஞான மையத்தை திறந்து வைத்து அருளாசி வழங்கினார். பகல் 12 மணிக்கு அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
மாலை 3 மணிக்கு அடியார் பெருமை என்ற தலைப்பில் சுப்பிரமணிய பாரதியாரின் ஆன்மீக சொற்பொழிவும், மாலை 5 மணிக்கு கலைமாமணி தேசமங்கையர்க்கரசியின் சிறப்பு சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு யோகாசன கலைமாமணி தங்கராசுவின் யோகா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடந்தது. இதில் எம்.எல்.ஏ., மஸ்தான், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். சராசந்தன் நன்றி கூறினார்.